யாழில் நீண்ட நாள் எரிபொருளுக்கு காத்திருந்தும் எரிபொருள் வராததால் பொதுமக்கள் வீதிக்கிறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போராட்டமானது இன்று(12) காலை 9மணியளவில் பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களாக எரிபொருளுக்காக காத்திருந்துள்ளனர்.
இந்த நிலையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இணைய வழியில் பதிவு செய்பவர்களுக்கே எரிபொருள் வழங்கப்படும் என வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பினால் பொதுமக்கள் ஆத்திரமடைந்துள்ளதோடு வீதி மறிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.