நம் சமூகத்தில் இன்றைய காலகட்டத்தில் பலரும் இடைத்தரகர்களால் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
விசயம் தெரியாதவர்கள் பலரையும் ஏமாற்றும் இடைத்தரகர்கள் செய்யும் அநியாயம் கொஞ்சநஞ்சமல்ல என பலரும் புலம்புவதை கேள்விப்பட்டிருப்போம்.
அந்த வகையில் எல்லோரும் நல்லவர்கள், நாணயமானவ்ர்கள் என கள்ளம் கபடமில்லாத மகேந்திரத்தார் போன்றவர்கள் இன்னும் சமூகத்தில் வாழ்ந்துகொண்டேதான் இருக்கின்றார்கள்.
அவ்வாறவர்களையே தேடிப்பிடித்து ஏமாற்றுபவர்களும் இன்னும் நம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
உண்மை தெரிந்த பின் தெரிந்தவர்கள் தானே நம்பினோமே என அவர்கள் மனவருத்தம் பட்டவர்களுக்குதான் தெரியும்.