நடிகர் விஜய் நடிப்பை தவிர்த்துவிட்டு கடைசி தளபதி 69 படத்தோடு சினிமாவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்திற்கான முழு பணிகளில் ஈடுபடவுள்ளார்.
அதற்காக விக்கிரவாண்டியில் வி. சாலையில் தவெக கட்சியின் முதல் மாநாட்டை திட்டமிட்டுள்ளார்.
நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. நடிகர் விஜய் பேசிய விஷயங்கள் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக அமைந்து வருகிறது. இதற்கு பலரும் ஆதரவளித்து வரும் நிலையில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரின் பேச்சை விமர்சித்தும் கலாய்த்தும் வருகிறார்கள்.
அந்தவகையில், நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் அவரது டிவிட்டர் பக்கத்தில், யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம். என்று சிரித்தபடி ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த விஜய் ரசிகர்களும் தொண்டர்களில் போஸ் வெங்கட்டை மோசமாக கலாய்த்தும் திட்டியும் வருகிறார்கள்.