அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய விலையுயர்ந்த பரிசு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில், வெளிநாட்டு தலைவர்களிடமிருந்து பைடன் குடும்பத்தினர் பெற்ற பரிசுகளின் விவரங்களை அமெரிக்க அரசுத்துறை வெளியிட்டுள்ளது. இதில் மோடி வழங்கிய பரிசு மிகப்பெரிய மதிப்புள்ள ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.