நிமிடபேலியகொட பிரதேசத்தில் பொலிஸ் சீருடையில் வந்த அதிகாரி ஒருவர் தனது மகனின் வாகனத்திற்கு எரிபொருள் பெற்றுக் கொள்ளும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியான நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் 16 மணித்தியாலங்கள் வரிசையில் நின்று எரிபொருள் பெற தயாரான போது, அதனை கண்டுக்கொள்ளாத பொலிஸ் அதிகாரி இடையில் புகுந்து மகனுடைய வாகனத்திற்கு எரிபொருள் பெற்றுள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் கோமடைந்த நிலையில் பொலிஸ் அதிகாரிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
தான் கடமைக்காகவே எரிபொருள் பெற்றேன் என பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார். எனினும் பொலிஸ் வாகனமின்றி மகனின் வாகனத்தில் வாகனத்தில் வந்து அவர் எரிபொருள் பெற்றுள்ளார்.
சீருடை அணிந்து அசிங்கமான செயற்பாடுகளில் ஈடுபடாதீர்கள், நாங்கள் 16 மணித்தியாலங்கள் இங்கு வரிசையில் நிற்கின்றோம். கடமைக்கு செல்ல வேண்டுமென்றால் பொலிஸ் வாகனத்தில் வாருங்கள்.
மகிந்தவை விரட்டிய எங்களுக்கு உங்களை துரத்துவது பெரிய ஒரு விடயமல்ல. நாளை உங்கள் காணொளி இணையத்தில் வரும் அப்போது பார்த்துக் கொள்ளங்கள் என கூறி பொலிஸ் அதிகாரியையும் அவரது மகனையும் பொது மக்கள் அங்கிருந்து விரட்டியுள்ளனர்.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், மக்கள் கடும் கோபத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்