பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படும் போது, நியமனம் பெற்ற மாணவர்கள் அனைவரும் தலைமுடி மற்றும் தாடி ஆகியவற்றினை நீக்கி ஒழுக்கத்துடன் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை பல்கலைக்கழகத்தின் கல்விப் பேராசிரியர் (துணைவேந்தர்) பேராசிரியர் நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
ஒழுக்கத்தைப் பேணுவதற்கான விதிகள்
பல்கலைக்கழகத்தில் ஒழுக்கத்தைப் பேணுவதற்கான விதிகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், பல்கலைக்கழகம் திறக்கும் வரை ஆன்லைன் விரிவுரைகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் அமரபுர பிரிவின் உயர்மட்ட மகாநாயக்கர் தொடம்பஹல சந்திரசிறி தேரரை பல்கலைக்கழக ஆளும் அதிகாரசபையினர் நேரில் சென்று பார்த்தபோது, இந்தப் பல்கலைக்கழகத்தை கடுமையான சட்ட முறைமையுடன் நிர்வகியுங்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்களின் நடத்தையை கண்டுகொள்ளாத பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பீடாதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.