பெண் ஒருவரை தகாத முறையில் துன்புறுத்தியதாக கூறப்படும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டணை விதித்துள்ளார்.
அத்துடன் சந்தேக நபர்களுக்கு தலா 15,000 ரூபாய் அபராதமும் செலுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
புறக்கோட்டை பொலிஸ் நிலைய பிரதிவாதிகள்
பெண்ணை தகாத முறையில் துன்புறுத்திய எம்.ஜயரத்ன மற்றும் எஸ். விஜேசிங்க ஆகிய இருவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பிரதிவாதிகள், பெண் ஒருவரை சட்டத்துக்கு புறம்பாக சிறையில் அடைத்து துன்புறுத்தியதாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.