தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த யுவதியொருவர் பிரதேச மக்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
தலவாக்கலை பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து குறித்த யுவதியை மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அக்கரப்பத்தனை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நீர்த்தேக்கத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த குறித்த யுவதி மயக்கமடைந்து நீர்த்தேக்கத்தில் விழுந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட யுவதி தற்போது சிகிச்சைக்காக லிந்துலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.