இலங்கையில் உள்ள அரச வங்கி பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், இருப்பதாக என மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள அரச வங்கி பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றும் போதும் கூட இத்தகவலை மறைமுகமாக கூறியுள்ளார். நாட்டிலுள்ள பல வங்கிகளினுடைய இறுக்கமான நிலையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் வெளிப்படையாக அறிந்தவகையில் சில வங்கிகள் மூடப்படக்கூடிய நிலைக்கு வந்துள்ளன. சில தனியார் வங்கிகள் 6 பில்லியன் ரூபா வரை அரசாங்கத்திற்கு கடன் கொடுத்துள்ளன.
குறிப்பாக தனியார் வங்கி கொடுத்ததாக சொல்கின்றார்கள் ஆனால் மீண்டும் அந்த பணத்தை அரசாங்கம் அந்த வங்கிக்கு திருப்பி கொடுக்கும் சந்தர்ப்பம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.