முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்று ஆரம்பமானது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலக்கப்பட்டோரின் உறவுகளது சங்கத்தினால், யாழ்ப்பாணத்தில் நேற்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
அதேநேரம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முன்பாக மாணவர்கள் மற்றும் ஊழியர்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.