முல்லைத்திவு – முள்ளிவாய்கால் மேற்கு கனிஸ்ட உயர்தர வித்தியாலய மாணவர்கள் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன்போது, ஒரு ஆசிரியர் உட்பட 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. பாடசாலை வளாகத்து மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு ஒன்று கலைந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் 5 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.