முல்லைத்தீவில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்குரிய வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் (11.03.2024) மாலை ஒட்டிசுட்டான் மாங்குளம் வீதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முள்ளியவளையில் இருந்து மாங்குளம் நோக்கி சென்ற பொலிஸ் வாகனம் மீண்டும் மாங்குளத்தில் இருந்து ஒட்டு சுட்டான் நோக்கி பயணித்த போது தச்சடம்பன் பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவத்தில் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
விபத்து தொடர்பாக மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.