முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் தனியார் காணியில் இருந்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு – கொக்குளாய், புளியமுனை பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றினை உரிமையாளரினால் நேற்று(21.03.2024) துப்பரவு பணிகளில் ஈடுப்பட்டுகொண்டிருந்த போது காணியில் மோட்டார் செல் இருந்துள்ளதை அவதனித்துள்ளார்.
இதனையடுத்து கொக்குளாய் பொலிஸாருக்கு காணியின் உரிமையாளரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் செல்லினை மீட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணையினை கொக்குளாய் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.