முல்லைத்தீவில் வீடொன்றில் சிலர் நுழைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இச் சம்பம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிநகர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
நீதவான் விசாரணைக்காக சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.