நாட்டில் தற்போது கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்களின் விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளதாக புறக்கோட்டையில் உள்ள மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அலங்கார பொருட்கள் இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதால் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
இரண்டு அடி உயர செயற்கை கிறிஸ்துமஸ் மரம் ரூ.200ல் இருந்து ரூ.2000 ஆகவும், 4 அடி கிறிஸ்துமஸ் மரம் ரூ.800ல் இருந்து ரூ.5500 ஆகவும், 7 அடி கிறிஸ்துமஸ் மரத்தின் விலை ரூ.6000ல் இருந்து ரூ.23000 ஆகவும் உயர்ந்துள்ளது.
250 முதல் 600 ரூபாய்க்கு மேல் மின்விளக்குகள்
250 முதல் 600 ரூபாய்க்கு மேல் மின்விளக்குகள், ஸ்டீமர்கள் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் மத்திய மலைநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் இயற்கை கிறிஸ்மஸ் மரத்தின் விலை இரண்டாயிரத்தை தாண்டும் என வர்த்தகர்கள் எச்சரிக்கின்றனர்.
அதோடு தற்போதைய எரிபொருள் விலையைக் கருத்தில் கொண்டு இம்முறை குறைந்த விலையில் அவற்றை வழங்குவது சாத்தியமற்றது எனவும் அவர்கள் மேலும் வலியுறுத்துகின்றனர்.