பதுளை பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலையொன்றின் பாடசாலைக்கு பஸ் இல்லாத காரணத்தினால் தாமதமாக வருகைதந்த மாணவர்களை பாடசாலைக்கு வெளியில் உள்ள பிரதான வீதியில் காலை கூட்டம் முடியும் வரை தடுத்து வைத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, தனியார் பேருந்துகள் சரியாக இயங்காததால், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் இருந்து, குறித்த நேரத்தில் பாடசாலைகளுக்கு வரும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
பதுளை மாவட்டத்தில் உள்ள பல நகர பாடசாலைகளில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி அதிகார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் இருந்து நகரப் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழக்கம் போல் போக்குவரத்து வசதி செய்து கொடுக்க முடியாதுள்ள நிலைமை காணப்படுகின்றது.
மேலும் பேருந்துகளுக்கு எரிபொருளைப் பெறுவதற்கு பல நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக பல பேருந்து ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மாணவர்களை பாடசாலைக்கு வெளியில் நிறுத்தி வைத்திருந்தமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்

