முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
அம்மா நீ எங்கு சென்றாய்!
ஆண்டொன்று ஆனாலும்
நேற்றுபோல் இருக்கிறதே!
நீயில்லா வீடிங்கே
நீற்றுப்போய் இருக்கிறதே!
நீ நடந்த பாதையெல்லாம்
நினைவொளியிற் தெரிகிறதே!
காலம் பல கடந்தாலும்
உனதன்பை மறப்போமா?
அப்பாவை இழந்தபின்னும்
அக்கவலை தெரியாமல்
எமைவளர்த்து ஆளாக்கி
வாழவளி வகுத்துத்தந்து
வாழவைத்த தெய்வம் நீ!
எம் வாழ்வு முடியும்வரை
உன் நினைவு உள்ளிருக்கும்
உன் ஆத்மா சாந்திபெற
உளமாற வேண்டுகின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!
இங்ஙனம் பிள்ளைகள்