அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 64 வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்பவர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த 19ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி வெள்ளை முட்டையொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும் சிவப்பு அல்லது கபில நிற முட்டையொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் , தற்போதைய சூழ்நிலையில் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.