முட்டை இறக்குமதி தொடரும் என்று வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
முட்டை இறக்குமதியின் மூலம் சந்தையில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாட்டைப் போக்க முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் நாளாந்தத் தேவையான ஒரு மில்லியன் முட்டைகளுக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான அனுமதி ஏற்கெனவே கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.