நாட்டுக்கு முட்டை இறக்குமதி செய்வதில் ஏற்படுள்ள தாமதம் குறித்து மேலும் விசாரணை நடத்த அதிகாரி ஒருவர் இந்தியா செல்ல உள்ளதாக வர்த்தகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா விரையும் அதிகாரி
முட்டைகள் தொடர்பான தரநிலை அறிக்கை மற்றும் முட்டை இறக்குமதியில் ஏற்படும் தாமதம் தொடர்பான உண்மைகளை சம்பந்தப்பட்ட அலுவலர் ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதேவேளை இந்தியாவில் இருந்து 2 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்திய விலங்குகள் மற்றும் சுகாதாரத் துறையால் அதன் நிலையான அறிக்கை வெளியிடப்படாததால் முட்டை இறக்குமதியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.