சமைக்கும் உணவுக்கு உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. உப்பு இல்லை என்றால் அந்த உணவை சாப்பிட முடியாது. உணவிற்கு சுவையைக் கூட்டும் உப்பு உங்கள் தலைமுடியை கருப்பாகவும், அடர்த்தியாகவும், அழகாகவும் மாற்றும் என்பது வெகு சிலருக்குத் தான் தெரியும். ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கு உப்பு எப்படு உதவும் என்பதை வாங்க தெரிந்துகொள்ளலாம்.
தலைமுடியை சுத்தம் செய்ய சீயக்காய் பொடியைக் கொண்டு முடியைக் கழுவும் பழக்கம் தான் முதலில் இருந்து. தற்போதைய காலகட்டத்தில் தான் ஷாம்பூ பயன்படுத்துகிறோம்.
இயற்கை பராமரிப்பை விரும்புபவர்கள் உப்பையும் பயன்படுத்தலாம் என ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. உப்பைக் கொண்டு முடியை ஆரோக்கியமாக்குவது எப்படி என்று பார்ப்போம்.
உப்பினால் கூந்தல் பொலிவு பெறும் : உப்பு பொடுகுத் தொல்லையையும் குறைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது தவிர, முடி உதிர்வு பிரச்சனையிலும் விடுபடலாம். எனவே முடி தொடர்பான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், இன்றே உப்பைப் பயன்படுத்தலாம்.
உப்பை பயன்படுத்தி பொடுகை எப்படி போக்குவது? முடியில் பொடுகு இருந்தால் உப்பைப் பயன்படுத்தலாம். கூந்தலுக்கு மட்டுமல்ல உச்சந்தலையில் உப்பை பயன்படுத்துவதும் மிகவும் நன்மை பயக்கும். பொடுகை நீக்க உப்பை பயன்படுத்தவும்.
இதற்கு முதலில் உங்கள் தலையில் உப்பைத் தூவி, மிகவும் லேசாக கைகளால் மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து முடியைக் கழுவவும். 15 நாட்கள் இடைவெளியில், இவ்வாறு உப்பை பயன்படுத்தினால், பொடுகு பிரச்சனை முழுவதுமாக நீங்கி, கூந்தல் வலுப்பெறும்