நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மலையகத்துக்கான ரயில் சேவைகள் முழுமையாக முடங்கியுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்க செயலாளர் தெரிவித்தார்.
ரயில் பாதையில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், மண்மேடுகளும் சரிந்து விழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த அனர்த்தங்கள் கொட்டகலை- தலவாக்கலை, கிரேட்வெஸ்டன், ரொசல்ல- வட்டவளை, வட்டவளை- கலபொட, இங்குருஓயா ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையில் பதிவாகியுள்ளன. இன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை பயணித்த ரயில், நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம் ரயிலுக்குள் சிக்கியுள்ள பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அனர்த்தங்கள் காரணமாக இன்று கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கவிருந்த இரண்டு ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.