முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
இதன்படி முச்சக்கர வண்டிகளின் பதிவு எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன் முதற்கட்டம் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் ஏனைய மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.