ஹம்பேகமுவ மயிலவல பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்து ஒன்றில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வேலிஓய நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.