ஊடக செயற்பாட்டாளரும்,மொழிபெயர்ப்பாளரும் இலக்கியவாதியுமான அமரர் வின்சன் புளேர்ரன்ஸ் ஜோசப்பின் 1ம் ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை அன்னாரது இல்லத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டதுடன் தனது மகளையும் விடுதலைப்போராட்டத்தில் ஈர்த்திருந்த ஜோசப் ஜயா கடந்த ஆண்டினில் கொரோனா பெருந்தொற்றின் போது மண்ணை பிரிந்திருந்தார்.
இந்நிலையில் குருநகர் புதுமை மாதா கோவில் கிழக்கு வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தலில் நினைவுப்பேருரையினை அரசியல் ஆய்வாளர் ம நிலாந்தன் தமிழ் ஊடகப்பரப்பில் மொழிபெயர்ப்பியல் கலை எனும் பெயரில் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்ப்படுகிறது.