முகப்புத்தகத்தில் பெண் வேடமிட்டு 14 வயது சிறுவனை வன்கொடுமை செய்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
இக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 24 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவனை முகப்புத்தகத்தில் தொடர்பு கொண்டு “நவோத்யா” என்ற யுவதி போல் நடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அத்தோடு அச் சிறுவனை கம்பஹாவுக்கு அழைத்து வந்து மறைந்திருந்து வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா, மகேவிட்ட பிரதேசத்தை சேர்ந்த திருமணமாகாத இச் சந்தேகநபர் தற்போது தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
இந் நிலையில் இவர் பிரிவெனாவில் கல்வி கற்று பல்வேறு விதமான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் பல ஆண்களிடம் நடத்தைகளை மேற்கொண்டு அவற்றினை படம்பிடித்து, மிரட்டி பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இவரால் வன்கொடுமைக்கு உள்ளான 14 வயது சிறுவன் தற்போது கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த சந்தேகநபரால் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் வந்து புகார் தெரிவிக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.