வென்னப்புவ, வைக்கல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் விருந்தில் போதைப்பொருளுடன் 39 சந்தேகநபர்களை வென்னப்புவ பொலிஸார் கைது செய்து மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்க மாரவில நீதவான் உத்தரவிட்டுள்ளார். கைதான சந்தேகநபர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களிடம் இருந்து ஐஸ் , ஹாஷிஸ் , கஞ்சா மற்றும் 15 போதைப்பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.