முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருவோருக்கு நாளை (01) முதல் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என எரிபொருள் விற்பளையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிவிக்கப்படும் என அதன் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லும் போது சுகாதாரப் பழக்கவழக்கங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, QR முறையின் கீழ் எவரும் நாளை முதல் ஒரு வாரத்துக்குள் ஒதுக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.