முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவைவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிப்பது தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சிக்கு சென்று எதிர்க்கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என பெரமுனவைச் சேர்ந்த குழுவொன்று கருத்து தெரிவித்துள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ஏற்பதுதான் பொருத்தமானது என்றும் அதன் மூலம் அவருக்கு அரசியலில் இருந்து கௌரவமான பிரியாவிடை வழங்க முடியும் என்றும் மற்றைய குழுவினர் வலியுறுத்துகின்றனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ராஜபக்ச குடும்பத்தில் தீவிர விவாதங்கள் நடந்துள்ளதாக அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.