நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மின்பிறப்பாக்கி கடந்த 8ஆம் திகதி பழுதடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அதன் திருத்தப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு மீளவும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேலும் இதற்கமைய தேசிய மின்கட்டமைப்புடன் 270 மொகாவோட் மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.