உலகக் கிண்ண போட்டியின் போது ஷகிப் அல் ஹசனை அவதூறாகப் பேசியதற்காக சர்வதேச வர்ணனையாளர்கள் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனிஸை நீக்குமாறு ஐசிசியிடம் கோராததன் காரணத்தை பங்களாதேஷ் மேல் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைக்க நீதிபதி முஸ்தபா ஜமான் இஸ்லாம் மற்றும் நீதிபதி எம்.டி அதாபுல்லா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அதன் தலைவருக்கு 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நவம்பர் 06 ஆம் திகதி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ணப் போட்டியின் போது, இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸுக்கு நடுவர் வழங்கிய சர்ச்சைக்குரிய ‘டைம்-அவுட்’ முடிவு குறித்து வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப்-அல் ஹசன் மீது வர்ணனையாளர் யூனிஸ் விமர்சித்ததிற்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரித்த மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரசல் அர்னால்டுடன் வர்ணனை செய்யும் இடத்தில் இருந்த வாக்கா யூனிஸினால் ஷகிப்பின் கோரிக்கை, இது ஒரு விளையாட்டு வீரரின் நடத்தை அல்ல என கூறிய விமர்சனத்திற்கு எதிராக அந்த நாட்டின் சட்டத்தரணியான ரஹ்மான் கானால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த பங்களாதேஷ் மேல் நீதிமன்ற நீதிபதிகள், அந்நாட்டின் கிரிக்கெட் சபையிடம் இதற்கான விளக்கம் கோரி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.