இன்றிலிருந்து நாட்டில் கோழி முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கோழி தீவகத்தில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால், விலைகளை அதிகரிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 1,200 ரூபா எனவும் முட்டையொன்றின் விலை 47 ரூபாய் 50 சதத்துக்கு விற்கப்படும் என்றும் அந்த சங்கம் அறிவித்துள்ளது.