வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மீது மிளகாய் தூளை வீசி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் கம்பஹா மாவட்டம் திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவில் நேற்று நடந்துள்ளது.
இந்த சந்தேக நபர்கள் கொலை செய்யப்பட்டவரின் வீட்டுக்கு அயலில் வசித்து வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுனகஹா கிழக்கு பள்ளியப்பிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த கே.வின்சன் என்ற 60 வயதான நபரே சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் மனைவி உயிரிழந்த பின்னர் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அயல் வீடுகளில் குடியேறியவர்களால் தனக்கு தொந்திர எனக் கூறியதன் காரணமாக ஏற்பட்ட தகராறை அடிப்படையாக கொண்டு சந்தேக நபர்கள் நேற்று அதிகாலை வீட்டிற்குள் புகுந்து மிளகாய் தூளை வீசி, கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நபரை கொலை செய்த பின்னர் சமையல் அறையில் இருந்த மிளகாய் தூளை உடல் முழுவதும் பூசியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னர், சந்தேக நபர்களின் வீடுகளை சில தீயிட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.