நாட்டில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது ஒரு மணி நேரமாகவுள்ள மின்வெட்டை 20 நிமிடங்களால் அதிகரித்து இன்றும் நாளையும் மின்துண்டிப்பு மேற்கொள்வதற்கு இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மின் வெட்டு நேரம்
இன்றும் நாளையும் சுழற்சி முறையில் இரவு 6 மணி முதல் இரவு 10 மணி வரை யான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியா லமும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.