நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (08) ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியினுள் குறித்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அதன் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு மேற்கொள்ளப்படும் பகுதிகள் குறித்து இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், தேவைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
நுரைச்சோலை அனல்மின் நிலையம் வழமைக்குத் திரும்பும் வரை நாட்டின் பல பகுதிகளில் குறைந்தது ஒரு மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நொரோச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த 3ஆம் திகதி நாடு பூராகவும் மின் தடை ஏற்பட்டது.
மின் உற்பத்தி நிலையத்தின் முழு கொள்ளளவையும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க சுமார் மூன்று நாட்கள் ஆகும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.