மின்னேரிய மினிஹிரிகம பிரதேசத்தில் அரச வங்கி ஒன்றுக்கு சொந்தமான ATM இயந்திரம் ஒன்று உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹபரணை – பொலன்னறுவை வீதிக்கு அருகில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் குறித்த அரச வங்கி அமைந்துள்ளது.
குறித்த வங்கியின் மேலாளர் மின்னேரிய பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கடந்த 26 ஆம் திகதி சிறிய ரக லொறி ஒன்றில் வந்த நபர் ஒருவர் அல்லது குழுவினரால் இந்த கொள்ளைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், குறித்த ATM இயந்திரத்தின் தகரத் துண்டு வெட்டி அகற்றப்பட்டு இந்த கொள்ளைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கொள்ளையிடப்பட்ட பணத்தின் பெறுமதி இதுவரை கணக்கிடப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.