திருகோணமலை மாவட்டம்-புல்மோட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புல்மோட்டை கரையா வெளி ஆற்றிற்கு இறால் பிடிப்பதற்காக சென்றபோதே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதில் புல்மோட்டை நாலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 70 வயதுடைய வரும் புல்மோட்டை ஹமாஸ் நகரைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த இருவரின் சடலங்களும் சம்பவ இடத்தில் தற்பொழுது காணப்படுகின்றது.
மேலும் விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்