இலங்கையில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் குளிரூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணம் அதிகரிப்பின் காரணமாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக கொழும்பு ஊடகமொன்றுக்கு சங்க தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு உணவுப் பொதி மற்றும் தேநீரின் கட்டணத்தை அண்மையில் குறைத்திருந்த நிலையில் மின் கட்டணம் அதிகரித்துள்ளதால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அவாகள் குறிப்பிட்டுள்ளனர்.
நுகர்வோரை மீண்டும் சிற்றுண்டிச்சாலைகளுக்கு ஈர்க்கும் வகையிலே சமீபத்தில் தேநீர் மற்றும் உணவுப் பொதியின் விலைகள் குறைக்கப்பட்டன என கூறினார்.
மேலும் உணவுப் பொருட்களின் உற்பத்தி நிறுவனங்களே பொதுமக்களுக்கான விலையை நிர்ணயிக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.