கொட்டாவ ருக்மல்கம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது 22 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின் விசிறியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த நபர் திருமணமாகி சில நாட்களே ஆகியிருந்த நிலையில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் வீட்டில் இருந்த பாதுகாப்பற்ற மின்சாரம் இணைப்பு காரணமாகவே மின்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.