மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியில் நேற்றிரவு மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திராய்மடு ஐந்தாம் குறுக்கு வீதியைச் சேர்ந்த கோகிநாதன் நிதுர்ஷன் வயது 22 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றிரவு வீட்டில் கதவு போடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், கதவில் பொருத்தப்பட்டிருந்த டிரில் வயரால் கேனை துளைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார்.
படுகாயமடைந்த நபர் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளைஞனின் சடலம் ஏற்கனவே பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த இளைஞன் கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பொறியியல் துறைக்குத் தெரிவானதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.