இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் மாலைத்தீவில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் இவர், மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர். பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் (CD) தடுப்பாட்ட நுட்பத்துடன் விளையாடும் சிறந்த வீரராக இருந்தார்.
இலங்கை அணியின் தேசிய அணியில் இடம்பிடித்த இவர், காற்பந்து உலக கிண்ண கோப்பைக்கான (FIFA World Cup) தகுதிகான் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அதே நேரம் இலங்கை தேசிய அணியில் சிறந்த பின் கள வீரராக விளங்கினார். கடந்த ஆண்டு இடம்பெற்ற SAFF கால் பந்தாட்ட சுற்றுப்போட்டியில், இந்திய அணியுடனான போட்டியில் சிறந்த வீரருக்கான விருந்தினை பெற்றுக்கொண்டார்.
அந்த போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது. இவ்வருடத்திற்க்கான மிக பிரபலமான வீரருக்காக இடம் பெற்ற கருத்து கணிப்பில் ரன்னரப்பாக பியூஸ்லஸ் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது