இலங்கையின் சிறந்த தேசிய கால்பந்தாட்ட தமிழ் வீரரான, மன்னாரைச் சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் (Duckson Puslas) என்பவர் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு மாலைதீவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடபில் நீதியான விசாரணை வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்த வீரரின் மரணம் தொடர்பில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை மிகுந்த சந்தேகம் கொள்கின்றதாக கூறப்படுகின்றது.
ஏனெனில் பியூஸ்லஸ் (Duckson Puslas0 சிறு பராயம் தொடக்கம் ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீரராவார் அவரது அதீத திறமையினாலேயே இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியில் இடம் பிடித்திருந்தார்.
அதேசமயம் இவர் ஒரு தமிழர் என்பதால் இவர் மீது இலங்கையின் பெரும்பான்மையின விளையாட்டு வீரர்கள் காழ்ப்புணர்ச்சியில் இருந்தார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மையே என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் மாலைதீவில் கால்பந்தாட்ட போட்டி ஒன்றுக்காக சென்றிருந்த வேளை அங்கு தங்கியிருந்த இடத்திலே (Duckson Puslas) தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டுள்ளார்.
எனவே டக்ஸன் பியூஸ்லஸ் (Duckson Puslas) இன் மரணம் இது திட்டமிட்ட படுகொலையாக இருக்கலாம் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கருதுகின்றதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் டக்ஸன் பியூஸ்லஸ் (Duckson Puslas) இன் மரணவிசாரணை நீதியான முறையில் இடம்பெற வேண்டுமெனவும் இவரது மரணத்திற்கான உண்மையான காரணம் அறியப்பட்டு பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விசாரணையை மேற்கொள்ளும் அதிகாரிகளையும், இலங்கை அரசையும் கேட்டுக்கொள்வதாக தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தெரிவித்துள்ளது.