2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 101,192 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 2020க்குப் பிறகு ஒரே மாதத்தில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தது இதுவே முதல் முறையாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, 2022 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 280,026 ஆகும்.
இதேவேளை, மார்ச் 2022 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடு இந்தியா என்றும், இந்திய பயணிகள் 22,231 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

