தற்போதைய மோசமான உணவு பழக்காத்தினால் வயதானவர்களுக்கு மட்டுமல்லாது இளைஞர்களுக்கும் மாரடைப்பு அபாயம் அதிகரித்து வருகிறது. இன்றைய துரிதாமான வாழ்க்கை முறையாலும், தவறான உணவுப் பழக்கத்தாலும், எமது உடல் பல நோய்களின் அடைக்கலமாக மாறி வருகிறது.
இந்நிலையில் உங்கள் தினசரி உணவு பழக்கத்தில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம் இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது.
இதயத்தின் நாலங்களில் கொழுப்பு படிவது தான் முக்கிய காரணம் ஆகும். நமது உணவு பழக்கவழக்கங்களை மேம்படுத்துவதன் மூலம், மாரடைப்பு அபாயத்தை பன்மடங்கு குறைக்கலாம்.
எனவே, மாரடைப்பு அபாயத்தை ஏற்படுத்தும் உணவை விட்டு விலகி இருந்தல் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
தவிர்க்க வேண்டியவை
அதிக அளவிலான உப்பு
அதிக உப்பை உட்கொள்ளும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், இந்த பழக்கத்தை உடனே மாற்றுங்கள். ஏனென்றால் அதிக உப்பு உங்கள் இதயத்திற்கு நல்லதல்ல. அதிக உப்பு சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதிக அளவிலான இனிப்பு
அதிக சர்க்கரை சாப்பிடுவதும் இதயத்திற்கு நல்லதல்ல, ஏனெனில் அதிக சர்க்கரை சாப்பிடுவதால், சர்க்கரை நோய் வரும் அபாயமும் உள்ளது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
முட்டை மஞ்சள் கரு
உங்கள் உணவில் முட்டையின் மஞ்சள் கருவை ஒருபோதும் சேர்க்க வேண்டாம், ஏனெனில் மஞ்சள் கருவில் சாச்சுரேடட் கொழுப்பு உள்ளது. எனவே, குறைந்த அளவே முட்டைகளை உட்கொள்ள வேண்டும்.
மைதா உணவுகள்
மைதா எந்த சூழ்நிலையிலும் உடலுக்கு நல்லதல்ல. குறிப்பாக இதய நோயாளிகளுக்கு இது மிகவும் ஆபத்தானது. இதனை உட்கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.