கலவான – பொதுப்பிட்டிய ஆற்றில் மூழ்கி காணாமல் போன சிறும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
12 வயதுடைய சிறுமி தனது தாயின் சகோதரி மற்றும் தனது சகோதரியுடன் நேற்று பிற்பகல் குறித்த ஆற்றுக்கு சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் சிறுமியின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சிறுமியின் சடலம் தற்போது கலவானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.