திருகோணமலை – தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள ஈச்சநகர் காட்டில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடும் பணியில் பொதுமக்களுடன் இராணுவத்தினரும் களம் இறங்கியுள்ளனர்.
முள்ளிப்பொத்தானை பகுதியை சேர்ந்த 23 வயதுடய மொஹம்மட் றிஸ்வான் எனும் இளைஞரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈச்சநகர் காட்டுப்பகுதியில் நண்பர்களுடன் சமைத்து சாப்பிடுவதற்காக நேற்று முன்தினம் சென்ற போதே காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இளைஞன் தொடர்பாக தகவல் தெரிவித்த பொலிஸார் “காணாமல் போன இளைஞனின் தொலைபேசிக்கு அழைப்பெடுத்த போது, தான் காட்டில் உயரமான மரமொன்றில் இருப்பதாக தெரிவித்ததாக கூறியதைடுத்து இன்றைய தினமும்(18) தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.