இதுவரை நாம் அனைவரும் நடிகர் வடிவேலுவை நகைச்சுவை நடிகராக மட்டுமே பார்த்து வந்தோம். ஆனால், முதல் முறையாக அவரால் சீரியஸான எமோஷனல் கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என காட்டிய திரைப்படம் மாமன்னன்.
இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இதே போன்ற கதாபாத்திரத்தில் வடிவேலு எப்போது நடிப்பாரா என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அது விரைவில் நடக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் சிவகார்திகேயனின் அயலான் திரைப்படத்தில் வடிவேலுவும் இணைந்துள்ளார் என கூறுகின்றனர். ஆனால், வடிவேலு இப்படத்தில் நடிக்கவில்லை.
அதற்கு பதிலாக தன்னுடைய குரலை கொடுத்துள்ளார் என்கின்றனர். ஆம், அயலான் திரைப்படத்தில் வரும் ஏலியனுக்கு வடிவேலு தான் குரல் கொடுத்துள்ளாராம். இதனால் கண்டிப்பாக இந்த ஏலியன் கதாபாத்திரம் திரையரங்கில் அட்டகமாக இருக்க போகிறது என கூறப்படுகிறது.