14.10.2021
உதவி வழங்கியவர்கள்: ஜெயதர்சினி(அனுசா) ஜீவகன் Oberhausen யெர்மெனி
உதவிபெற்றவர்:ப.காளிப்பிள்ளை(மாவீரர் குடும்பம்)கைவேலி
உதவித்தொகை:150 €
உதவித் திட்டம்:மாணவர்களின் மாதாந்த கல்விக்கான உதவி.
எம்மோடு இணைந்து பயணிக்கும் அன்பான உறவுகளே!போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் எமது மாணவர்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு ஊக்குவிக்க வேண்டியது எமது கடமை அந்த வகையில் திருமதி ஜெயதர்சினி ஜீவகன் அவர்களின் பிறந்த நாளின் போது அவர்களின் நண்பர்கள் வழங்கிய பணத்தினை பெண்தலைமைத்துவம் கொண்ட குடும்பத்தின் பிள்ளைகளுக்கு கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய எழு மாதங்களுக்கு உரிய நிதி வழங்கப்பட்டது. கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய இந்த நிதி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த உதவியினை நேரடியாகச் சென்று வழங்கிய எமது உறுப்பினர்
திரு சஜீவன் அவர்களுக்கும் இந்த உதவியை வழங்கிய ஜெயதர்சினி ஜீவகன் யெர்மெனியில் வாழும் குடும்பத்தினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம் அத்துடன் திருமதி ஜெயதர்சினி இவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.