மீள் அறிவிப்பு வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தொடர்ந்து அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையில் சாதாரண சேவைகளுக்காக பயணங்களை தளர்த்துவதற்கு இன்னமும் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து மற்றும் ரயில் சேவை ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை மாகாணாங்களுக்கு இடையில் முன்னெடுக்கப்படுகின்றது.
எனினும் மீள் அறிவிப்பு வரை மாகாணங்களுக்கு இடையிலான முழுமையான பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.