இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தனவின் சாதனையை விராட் கோஹ்லி முறியடித்துள்ளார்.
இதன்மூலம் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை கோஹ்லி படைத்துள்ளார்.
மஹேல ஜெயவர்தன 31 இன்னிங்ஸ்களில் 1,016 ஓட்டங்களை குவித்து ரி20 உலகக்கிண்ண போட்டித்தொடர் வரலாற்றில் முதலிடத்தில் இருந்தார்.
நடப்பு டி20 உலகக் கிண்ண போட்டியில் இன்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோஹ்லி குறித்த சாதனையை முறியடித்துள்ளார்.
இன்றைய போட்டியில் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.